“ஜெமினி பிளையோவர்” என்று சொன்னால் தான் மக்கள் உடனே புரிந்துகொள்வார்கள். 1973ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மேம்பாலம், சென்னை நகரில் உருவான முதல் மேம்பாலம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் கட்டப்பட்ட மூன்றாவது மேம்பாலமாகும். அந்தக் காலத்தில், இது நாட்டிலேயே நீளமான மேம்பாலமாகவும் இருந்தது. அந்த இடத்தில் ஜெமினி ஸ்டுடியோ அமைந்திருந்ததால், அந்த சந்திப்பை “ஜெமினி சர்க்கிள்” என்றும், மேம்பாலத்தை “ஜெமினி பிளையோவர்” என்றும் அழைக்கத் தொடங்கினர்.
குதிரைப்பந்தயத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நினைவூட்டும் வகையில், இங்கு குதிரையை கட்டுப்படுத்தும் மனிதரின் சிலைகள் நிறுவப்பட்டன.
இப்போது, ஒரு மணி நேரத்திற்கு சுமார் 20,000 வாகனங்கள் இந்த மேம்பாலம் வழியாக செல்கின்றன.
அந்தக் காலத்தில் பிரபலமான ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி இதை கட்டியதாக கூறப்படுகிறது — அந்த நிறுவனம் இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை.
பின்னர், ஏர்செல் நிறுவனம் மேம்பால பராமரிப்புப் பொறுப்பை ஏற்று, அதில் விளக்குகள் அமைத்தது. ஆனால் அந்த நிறுவனம் கூட தற்போது இல்லை.
சென்னையின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக விளங்கும் ஜெமினி பிளையோவர், இன்றும் அதேபோல் பரபரப்பாகவே உள்ளது.
https://whatsapp.com/channel/0029VbBCUk6HLHQbT1QJT040
Follow us on X Twitter: https://x.com/peoplenewslivex

