பராசக்தி படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வெளியானது

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘பராசக்தி’ திரைப்படத்தின் முதல் பாடல் ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இந்த படம், சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமாகும். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures நிறுவனம் தயாரித்து வருகிறது.

இத்திரைப்படத்தில் அதர்வா, ரவி மோகன், பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார்.

படத்திற்கான இசையை ஜிவி பிரகாஷ் குமார் அமைத்துள்ளார். சுமார் ₹150 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது போஸ்ட்-ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

‘பராசக்தி’ திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 14ஆம் தேதி (பொங்கல் விடுமுறை) உலகமெங்கும் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், இன்று வெளியிடப்பட்ட முதல் பாடல் ப்ரோமோ ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://whatsapp.com/channel/0029VbBCUk6HLHQbT1QJT040

Follow us on X Twitter: https://x.com/peoplenewslivex

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *